ராமநாதபுரம் ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவகங்கை மதுராந்தகி நாச்சியார் ஆளுமைக்குறியதும் சிவகங்கை மாவட்ட சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இக்கோயில் ராமநாதபுரம் மாவட்டம் எஸ் பி பட்டிணம் ரகுநாத சமுத்திரம் என்கிற சோழகன் பேட்டையில் அமைந்துள்ளது.

இக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கிராமத்தினருக்கு சந்தனமாரியம்மன் கணவில் தோன்றி, “கடலில் நீங்கள் வீசும் வலையில் நான் கிடைப்பேன்” என கூறியதன் பேரில், மீனவர்களின் ஆழ்கடலில் வீசிய வலையில் இரண்டரை அடி சிலையாக கிடைக்கப்பெற்ற இச்சிலையை, பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் தீர்த்தாண்டதாணம், முத்துக்குடா, புதுப்பட்டிணம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் இஷ்ட தெய்வமாக வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் இக்கோயிலுக்கு கடந்த 14ஆம் தேதி அனுக்சை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, அக்னி சங்கிரஹணம், கும்பலாகாரம் ஆகிய பூஜைகளுடன் தொடங்கியது.
இன்று முதற்கால பூர்ணாகுதி தீபாராதனை கடம்புறப்பாடு செய்யப்பட்டு ராஜகோபுரம், மூல கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கலசங்களுக்கு சிவாச்சாரிகள் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேம் நடைபெற்றது.
அப்போது ட்ரோன் மூலம் ரோஜா மலர்கள் தூவப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீரும் தெளிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர் வந்திருந்த அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

