ராமநாதபுரம் பாட்டையா தவசி ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழா
ராமநாதபுரம் அருகே பாட்டையா தவசி ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழாவில் பால்குடம் எடுத்த பக்தர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் முத்துமாரியம்மன் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ பாட்டையா என்ற தவசி ஐயா ஆலயத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வழுதூர் ஸ்ரீஅருளொளி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து தவசி ஐயா ஆலயத்தில் நேத்தி கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கப்பட்ட விழாவில் கருட பகவான் வானில் வட்டமிட்டது. பக்தர்கள் ஆரவாரம் செய்து குலவையிட்டனர் அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இதில் வழுதூர், வாலாந்தரவை தெற்கு காட்டூர் உடைச்சியார் வலசை தெற்கு காட்டூர், ரகுநாதபுரம் ராமநாதபுரம் படவெட்டி, வலசை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மங்கலம் வகையரா ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

