சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்களின் 224 வது குருபூஜை விழா
 
					சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 224 வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் இன்று மருதுபாண்டியர்களின் திருஉருவப்படத்திற்கு ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதில் ராமநாதபுரம் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், ராமநாதபுரம் திமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை அகமுடையார் சங்க நிர்வாகிகள் பாபு, ரமேஷ் தலைமையில் செய்திருந்தனர். விழாவில் சிலம்பொலி சிலம்பாட்ட கலைக் குழுவினரால் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


 
			 
			 
			 
			 
			