ராமநாதபுரத்தில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அப்துல் முனாப் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி வட்டாரங்கள் வாரியாக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்தல், ராமநாதபுரம் மாவட்டம் தென்னை விவசாயிகளுக்கு வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்த 5 ஏக்கர் நிலத்தில் அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை செய்துதரக்கோருதல், ஒதுக்கீடு செய்த 5 ஏக்கர் நிலத்தினை மத்திய, மாநில அரசுகள் தென்னை விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் சம்மந்தமான மாநில செயலாளரிடம் கருத்து கோருதல், கேரள மாநிலத்தில் அரசு தென்னை விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்வதுபோல் தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளிடம் நேரடியாக தேங்காய்களை கொள்முதல் செய்வதை வலியுறுத்த வேண்டும் என்றும் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் நா.மணிமாதவன், பொருளாளர் த.மேகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால், துணைச்செயலாளர் தங்கச்சாமி மு.மா. கதிரேசன், துணைத்தலைவர் மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்டத்தில் ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

