ராமநாதபுரம்: முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவ விழா

ராமநாதபுரம்: முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவ விழா

ராமநாதபுரம் அருகே தெற்கு காட்டூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவ விழா ஏராளமான பெண்கள் பாரியை சுமந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளை கொட்டு உற்சவ விழா கடந்த ஐந்தாம் தேதி முத்து பரப்புடன் துவங்கியது.

ஏழு நாட்கள் முத்து மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு முழுவதும் ஆண்கள் பெண்கள் கும்மியாட்டம் ஒயிலாட்டம் ஆகியவை அம்மன் ஆலயத்தில் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

செவ்வாய்க்கிழமை வழுதூர் பெரிய ஊரணிகள் இருந்து கரக பூசாரி பாலு கரகம் எடுத்து முத்துமாரியம்மன் ஆலயத்தில் செலுத்தினார். கரகத்திற்கு வழுதூர் வாலாந்தரவை உடைச்சியார் வலசை மொட்டையன் வலசை தெற்கு வாணி வீதி தெற்கு காட்டூர் ஏந்தல் ஆலாபுளி, கீரிப்பூர்வலசை, அளம், ரகுநாதபுரம் காரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கரகத்திற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு தெற்கு காட்டூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்ட முலைப்பாறைகளை மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டு முத்து மாரியம்மன் ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இரவு பல்சுவை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதன்கிழமை முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை ஏராளமான பெண்கள் ஆண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து வழுதூர் பெரிய ஊரணி பகுதியில் கரைத்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம் ஆர் ராமமூர்த்தி ஊர் தலைவர் சிவசாமி, கிராம பிரமுகர் துரை, சோமு உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *