ராமநாதபுரம் அருகே மனநல காப்பகத்தில் ஆட்டம் பாட்டத்துடன் சமத்துவ பொங்கல் விழா!

ராமநாதபுரம் அருகே மனநல காப்பகத்தில் ஆட்டம் பாட்டத்துடன் சமத்துவ பொங்கல் விழா!

ராமநாதபுரம் அருகே மனநல காப்பகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழா… ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது செஞ்சோலை மனநல காப்பகம்.

இந்த காப்பகத்தில் சுமார் ஆயிரக்கணக்கான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று அவர்களது உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் விழா மனநல காப்பகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் செஞ்சோலை மனநல காப்பகத்தில் இருக்கக்கூடிய சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து தைத்திருநாளை போற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இக்காப்பகத்தில் இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் புத்தாடை அணிந்து தங்களது காப்பகத்தின் முன்பாக புதிய கோலமிட்டு, பொங்கல் பானையில் பொங்கல் வைத்தும், கரும்புகள் மற்றும் பனங்கிழங்கு இனிப்பு வகைகளை கொண்டு பொங்கல் வைத்து சிறப்பாக சமத்துவ பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இக்காப்பகத்தின் உரிமையாளர் நாகேஸ்வரன் தெரிவிக்கையில், “கடந்த 20 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இக்காப்பகம் செயல்பட்டு வருவதாகவும், இக்காப்பகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இக்காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து விடப்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி இக்காப்பகத்தில் அரவணைத்து முறையான வகையில் சிகிச்சை அளித்தும், அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இருக்கக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று இணைந்து இத்திருநாளை போற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றதாக தெரிவித்தார்.”

தங்களது காப்பகத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் புத்தாடை அணிவிக்கப்பட்டு பொங்கலோ பொங்கல் என பொங்கல் வைத்தும் குழவையிட்டும் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியும் வெகு விமர்சையாக கொண்டாடியதாகவும், மேலும் தங்களை மறந்து தங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில் அவர்களை வழிநடத்தி அவர்களையும் மனம்மகிழ செய்வதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பொங்கல் விழாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சற்று குணமடைந்தவர்கள் தங்களை மறந்து நடனமாடியது காண்போரை கண் கலங்க வைத்தது..

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *