உலக நன்மை வேண்டி ராமநாதபுரத்தில் கூட்டுப் பிரார்த்தனை
 
					ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் அருளொளி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருளொளி விநாயகர் ஆலயத்தில் 58 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 18ஆம் தேதி காப்பு கட்டுடன் விழா துவங்கியது. ஏராளமான ஆன்மீக பக்தர்கள் பால்குடம் எடுக்க காப்பு கட்டிக்கொண்டனர்.
பத்து நாட்களும் விநாயகப் பெருமானுக்கு பல்வேறு விதமான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை ஆலய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது திருவிளக்கு பூஜையை அழகன்குளம் பிரேமா குழுவினர்கள் நடத்தி வைத்தனர்.
உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் குடும்பத்தில் கல்வி செல்வம் பெருகவும், இளம் பெண்கள் திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையவும், கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


 
			 
			 
			 
			 
			