ராமநாதபுரத்தில் யோகாசனப் போட்டி: பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் யோகாசனப் போட்டி: பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்ட யோகாசன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான யோகாசனம் போட்டி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட யோகாசனம் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.

சிறு குழந்தைகள் முதல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமை மற்றும் குழுப் போட்டிகளில் பங்கெடுத்தனர். இதில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

யோகாசனம் செய்வதால் குழந்தை பருவம் முதல் பள்ளிப் பருவம் வரை யோகாசனத்தில் ஈடுபடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று விளக்கம் அளித்து பேசிய யோகாசன சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர், உடல்வாகு சீராக இருக்கும் என்றும், எடை சரியாக இருக்கும் கல்வியில் குறிக்கோள் அடைவதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்றும், ராமநாதபுரம் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *