ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் பொங்கல் விழா
இராமநாதபுரத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டலம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் இரண்டு தினங்கள் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு முதல் நாள் நிகழ்ச்சியாக பட்டணம்காத்தான் அம்மா பூங்காவில் நடைபெற்றது.
ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது. மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோக சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே ஜே பிரவீன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில் பாரம்பரிய நாதஸ்வரம், தவில், கரகாட்டம், தப்பாட்டம், கிராமிய பாட்டு உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

