ராமநாதபுரம் முன்னாள் காங். நகர் தலைவர் நினைவேந்தல்!
ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நகர் தலைவர் பிஆர்என். முத்துராமலிங்கம் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அவரின் சகோதரரும், ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புக் குழு உறுப்பினரும், நகரமன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியனின் வாலியா குழும வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சி திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் கலந்துகொண்டு முன்னாள் நகர் தலைவர் முத்துராமலிங்கம் அவர்கள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் கோபால், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, ராமநாதபுரம் வட்டார தலைவர் காருகுடி சேகர், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேது பாண்டியன், மாவட்ட கலை பிரிவு தலைவர் வாலம்புரி, போகலூர் வட்டார காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் நேரு மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

