பிரதமர் மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பாஜகவினர் ரத்த தானம்

பிரதமர் மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பாஜகவினர் ரத்த தானம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பாஜகவினர் இனிப்புகள் வழங்கி சுவாமி தரிசனம் செய்து அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பு பாஜக சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாவட்ட முன்னாள் தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகநாதன் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *