ராமநாதபுரம் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் ஆலய முளைப்பாரி உற்சவ விழா!
ராமநாதபுரம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய முளைப்பாரி உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் அருள்பாளித்துவரும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் 41 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவிழா ஒரு வார காலத்திற்கு முன்பு துவங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இப்பகுதியில் வாழும் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் 40 ஆண்டுகளாக இந்த விழாவை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் முளைப்பாரி உற்சவ விழாவிற்கு மாவட்ட அளவில் உள்ள சொந்தங்கள் ஒன்று கூடி இந்த விழாவை கொண்டாடி வருவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டிகள் விதவிதமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனை வணங்கி சென்றனர்.

