ஆடி கிருத்திகை: சுவாமிமலை சுவாமிநாத ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு
ஆடி கிருத்திகை விழாவையொட்டி தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகக்கடவுளின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில். இங்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படி கட்டுகளாக இருந்து இங்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்கின்றனர்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடி கிருத்திகை இந்த ஆடி மாதத்தில் இரண்டு முறைவந்தது. இரண்டாவது ஆடிகிருத்திகை விழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.
மூலவர் தங்க கவசம் வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். உற்சவர் ஆறுமுக கடவுளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்து முருக கடவுளை தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் நிர்வாகம் பக்தர்கள் வசதிகளுக்காக இவ்வாறு ஏற்பாடுகளை செய்து இருந்தது அதிக அளவு காவல்துறையினர் இங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

