திருச்செந்தூர் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஏற்பாடுகள்: கனிமொழி MP ஆய்வு

திருச்செந்தூர் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஏற்பாடுகள்: கனிமொழி MP ஆய்வு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த (22/10/2025) அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி, 27/10/2025 அன்று சூரசம்ஹாரம் நிகழ்வு மற்றும் 28/10/2025 அன்று திருக்கல்யாணம் நிகழ்வுடன் நிறைவுபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பெருமளவு கூடுவார்கள்.

இந்த நிலையில், திருக்கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் பக்தர்கள் தாங்கும் இடங்களை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் செந்தில் முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *