திருச்செந்தூரில் தவெக தலைவர் விஜய் சுவாமி தரிசனம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை (28.04.2026) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று (27.04.2026)இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்த விஜய், சாலை மார்க்கமாக புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்த நிலையில், பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், கடலில் கால் நனைத்து விட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்.
கோவில் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் சண்முகவிலாச மண்டபம் சென்றடைந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், ‘வெற்றி வேல்’ வழங்கி ரவிக்கப்பட்டார். விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர்.
சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ம் தேதி( 23.04.2026) நிறைவு பெற்ற நிலையில், விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது,அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
