“நாய், பேய், நரி நாட்டை ஆளும் போது, இந்த புலி ஆளகூடாதா?, 2026இல் பாருங்கள்? – சீமான்
“ஓசியில திருவாரூரில் இருந்து வந்தவன்”, “நம்ம தாத்தாவுக்கு ஏசி போட்டு குடுத்தேன்”னு பேசிட்டு அலையுரான், காலக்கொடுமை என பொன்னேரியில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் ஆவசமாக தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஆதி தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் அயோத்தி தாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனார், ம.சி.ராசா ஆகியோரை போற்றும் வகையில் முப்பெரும் பெருவிழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

பள்ளியில் படிக்கும் இடத்தில் சாதி கேட்கவில்லை என்றால் சாதி ஒழிந்துவிடும் என பேசி வருகிறார்கள் எனவும், சாக்கடையை அகற்றாமல் அதனை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என உவமை கூறினார்.
“எந்த சமயத்திற்கும் பொது மறை, பொது நூல் திருக்குறள் எனவும், திருக்குறளை தந்தவர் அயோத்திய தாச பண்டிதரின் பரம்பரை, வள்ளுவனை வாழ்த்துகிறார்கள், அவன் பரம்பரையில் வந்தவர்களை ஒதுக்குகிறார்கள்”.
“ஓசில திருவாரூரில் இருந்து வந்தவன், நம்ம தாத்தாவுக்கு ஏசி போட்டு குடுத்தேனு பேசிட்டு அலையுரான், காலக்கொடுமை, இந்த மானங்கெட்ட கூட்டம் அதையும் கேட்டு டாஸ்மாக்கில் சரக்கு போட்டு மல்லாந்து படுத்து கொண்டுள்ளது”.
“பல மக்கள் இன்னமும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை எனவும், சமூக நீதி, முற்போக்கு பேசும் ஆட்சியின் அவலங்கள். தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர் என அனைத்து சாதிக்கும் கட்சி உள்ளது. ஆனால் தமிழன் என்ற இனத்திற்கு கட்சி உள்ளதா என வினவினார். காமராஜருக்கு அனைவரும் மாலை அணிவிப்பார்களா, வவுசி க்கு அனைத்து சாதி மாலை அணிவிப்பார்களா?”
“அந்தந்த தலைவர்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் சென்று மாலை அணிவிப்பார்கள், அது திராவிடம். ஆனால் அனைத்து தலைவர்களுக்கு நான் மாலை அணிவிக்கிறேன்”.
“நாய், பேய், நரி நாட்டை ஆளும் போது, இந்த புலி ஆளகூடாதா? 2026இல் பாருங்கள்..”
“பிற்படுத்தப்பட்ட மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறது. சிவன் யார், சிவனை மதித்து வணங்குகிறாய் என்றும், அவனது பரம்பரையை மிதித்து ஒதுக்குகிறாய்”
“போலி தமிழ் தேசியம் என நம்மை பற்றி கூறுபவர்கள் அனைவரும் கூலி திராவிடர்கள். பாடும் பொருள் சிவன் அல்ல, பாடும் பொருள் சீமானாக இருக்கிறேன். 3 பேரையும் ஒரே மேடையில் பேச வேண்டும்”.
“பெரியார் ஒரு போதும் தமிழன் என்று கூறியதில்லை. அவரே கன்னடன் என கூறியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் மராட்டியராக இருந்தாலும் அவரது கோட்பாட்டை பின்பற்றி மதிக்கிறோம். அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோருடன் பெரியாரை எப்படி ஒப்பீடுகிறீர்கள்?. அனைத்து பெருமைகளையும் ஈ வே ரா முதுகுக்கு பின்னர் அமைத்தவர்கள் திராவிட கூட்டம்”
“கீழடியில் 2 ஏக்கர் நிலத்தை மட்டுமே தோண்டிவிட்டு தமிழர் நாகரீகம், திராவிட நாகரீகம் என எப்படி கூறுகிறீர்கள்?”
“மொத்த இடத்தையும் தோண்டினால் தமிழன் நாகரீகம் தெரிந்து விடும், அதனால் அச்சம். திராவிடர் என்று கூறியது வேறு எண்ணத்தில், ஆனால் அதற்கு பிறகு ஒரு திருட்டு கூட்டம் வரும் என தெரியாது” என தெரிவித்தார்.

