சிறுமிக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆரம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வெற்றி கழகத்தினர், பாலியல் வன்முறை சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் பத்து வயது சிறுமியை வடமாநில இளைஞன் சாலையில் நடந்துசென்ற சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒன்பது நாட்கள் ஆன நிலையில் வடமாநில இளைஞனை காவல்துறையினர் இன்னும் பிடிக்காததை கண்டித்து பல்வேறு கட்சியினர், பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து அதிமுக சார்பில் காவல் துறையினரை கண்டித்து சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இன்று திருவள்ளூர் வடக்கு ஒன்றியம் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டு கிலோமீட்டர் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நடைபயணமாக வந்து காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க வரும்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர் களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து புகார் அளித்துவிட்டு காவல் நிலையம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இன்னும் இரண்டு நாட்களுக்குள் அந்த பாலியலில் ஈடுபட்ட இளைஞனை பிடித்து விடுவோம் என உறுதி அளித்ததை அடுத்து தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

