அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு திருச்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சி
 
					தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற முடிந்த அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் நேரு முன்னிலை வகித்தார். 36 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஈஞ்சம்பாக்கம் காம சுப்புராயன் முதலியார் பள்ளி கூடலூர் பரிசை காரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிட அரசு மேல்நிலைப்பள்ளி பாலூர், மணம்மை, பட்டிப்புலம் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். இவர்களுக்கு கல்வித்துறை அமைச்சர் மற்றும் நேரு அவர்கள் பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் கேடயங்களும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.


 
			 
			 
			 
			 
			