தொழில்வளர்ச்சியில் முன்னேறும் தமிழகம்
முமைச்சருடைய முயற்சி தொழில்வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் பேட்டி.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் 6, 7, 8 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று திரேஸ்புரத்தில் உள்ள சிறுமலர் ஆர் சி உயர்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெற்றது.
இம்முகாமை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாறுதலுக்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு விண்ணப்ப சான்றிதழ்களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் தொகை அதிகம் உள்ள இந்த 6, 7, 8 ஆகிய வார்டு பகுதியாக மட்டும் இல்லாமல் மிகவும் ஏழை எளிய மக்கள் அதிகமாக உள்ள பகுதியாகவும், மீன்பிடி தொழில் செய்யக்கூடியவர்கள், உப்பளத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இப்பகுதி என்பதால் இந்த முகாமில் அதிகமாக பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய எண்ணிக்கை இருப்பதினால் அதற்கான மனுக்கள் பதிவு பண்ணக்கூடிய கம்ப்யூட்டர்களும், டேபிள்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.”

“மகளிர் உரிமைத்தொகை பதிவு பண்ணுவதற்கும் 12 டேபிள்கள் மொத்தம் போடப்பட்டுள்ளது” என்றார்.
மக்களும் நம்பிக்கையோடு வருகிறார்கள் காப்பீட்டு அட்டைக்கு போட்டோ எடுத்து வருகிறார்கள். நுகர்வோர் துறையில் இருந்தும் கூட்டுறவுத் துறையில் இருந்தும் அவர்களுக்கு ரேஷன் கார்டு திருத்தம் செய்து கொடுக்கப்படுகிறது.
வருவாய் துறை முதல் ஜாதி சான்றிதழ் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் விண்ணப்பங்களும் மனு கொடுக்கப்படுகிறது. மின்வாரியத்தின் மூலம் பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகைக்காக அதிகமான விண்ணப்பங்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் வந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், “முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளது போல தகுதி உள்ள பெண்களுக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு ஏற்கனவே தரவுகள் இல்லாத பதில் வந்தவர்கள் எல்லோரும் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்கள்”.
“மக்களும் முதலமைச்சருடைய கருத்தை ஏற்று நம்பிக்கையோடு விண்ணப்பம் செய்கிறார்கள். தகுதியுள்ள பெண்களுக்கு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்” என்றார்.
“அனைத்து மனுக்கள் மீது 47 நாட்களில் பரிசீலனை செய்யப்படும்” என்றார்.
“நம்முடைய பரவலான வளர்ச்சி எல்லா மாவட்டத்திலும் தொழில் வளர்ச்சி எல்லா மாவட்டத்திற்கும் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் அப்படிங்கறது முதலமைச்சர் பொறுப்பேற்ற உடனே 2030 க்குள் ஒரு டிரில்லியன் எக்கனாமி வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இலக்கை பணியை தொடங்கியுள்ளார். அதேபோல எல்லா நிறுவனத்திலும் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளது.”
“கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி கான முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை போன வரம் தொடங்கப்பட்டுள்ளது. இது 16 கோடி மதிப்பில் இந்நிறுவனம் உற்பத்தி தொடங்கியுள்ளது.”
“இவ்வாறு தமிழகத்தில் எல்லா இடமும் வளர்ச்சியடைந்து வருகிறது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம், இந்தியாவின் முதன்மை மாநிலம் இரண்டு இலக்க வளர்ச்சி தமிழ்நாடு அடைந்திருக்கிறது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இருக்கும்போது அதே வளர்ச்சி தற்போது வந்துள்ளது”.
“முதலமைச்சருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் எல்லாம் பார்க்கிறோம். நிச்சயமாக தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக திகழ்வது நம்மக்கெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினரும் வடக்கு மண்டலத் தலைவருமான திரு.T.நிர்மல் ராஜ் MC அவர்கள் செய்திருந்தனர்.

