மக்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

மக்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மக்கள் நலன் செய்ய வேண்டும் என இப்போதுதான் அறிவு வந்ததா ? அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் எங்கே வைத்திருக்கிறார். அந்தப் பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா? என அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் அண்ணா பிறந்த நாளை ஒட்டி ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் உறுதிமொழி ஏற்கக்கூடிய நிகழ்வு நடைபெற உள்ளது” என கூறினார்.

‘அப்போது தவெக விஜய், திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை’ என குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தேர்தல் வாக்குறுதி என்பது மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மை செய்ய வேண்டும். எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யலாமென வாக்குறுதி கொடுக்கப்படும்.”

“வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக இந்த நிதியை கொடுத்தால் வாக்குறுதி நிறைவேற்றி விடுவார்கள் என ஒன்றிய அரசாங்கம் தமிழகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அளவிற்கு எந்த வகையில் நிதியாதாரங்களை கொடுக்க முடியாமல் தடை செய்கின்ற வகையில் செய்கிறார்களோ அதை விஜய் அவர்கள் புரிந்து பேசுகிறாரா இல்லையா என தெரியவில்லை.”

“விஜய் கேட்கின்றார் என்று சொன்னால் விஜய் இதுவரை இந்த தமிழகத்தின் மக்களுக்கு தமிழ்நாட்டுடைய இளைஞர்களுக்கு தமிழ்நாட்டின் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களுக்கு எவர்களுக்காவது எந்த உதவியாவது செய்திருக்கிறாரா?” என அமைச்சர் கேள்வி எழுப்பினார்

“விஜய் நடிகராக இருக்கும் போது 200 முதல் 300 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகின்ற நடிகர் எந்த செயலாவது மக்களுக்காக செய்திருக்கிறாரா? இல்லை. எதுவும் செய்யாமல் கேள்வி கேட்பது எளிது” எனக் கூறிய அவர். “முதலமைச்சர் மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்வதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” எனக் கூறினார்.

“பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்கள். மக்களை நம்பி தான் நாங்களும் எங்கள் இயக்கமும் இருக்கிறது. மக்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை எங்களுடைய கழகத் தலைவர் தமிழக முதலமைச்சர் அத்தனை நிறைவேற்றி தருவார்கள்” என்றார்.

“யார் கட்சியை ஆரம்பித்தாலும் திமுகவை தான் பற்றி பேசுவார்கள். ஏனென்றால் திமுக தான் மக்கள் மன்றத்தில் இருக்கக்கூடிய இயக்கம், மக்களை நேசிக்கக்கூடிய இயக்கம், திமுக இயக்கம். அதனால் தான் சாதாரணமொருவர் கட்சி ஆரம்பித்தால் திமுகவை வீழ்த்தப் போகிறேன் என்கிறார்கள். திமுக பாரம்பரியமானது.”

“அண்ணாவின் காலத்தில் இருந்து தலைவர் கலைஞர் காலத்தில் இருந்து நம்முடைய முதலமைச்சர் தளபதியுடைய காலத்தில் இருந்து அத்தனையும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மை மக்கள் ஒவ்வொருவருடைய உயர்வுக்காக இருக்கக்கூடிய இயக்கம். திராவிட முன்னேற்றக் கழகம் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே என்னவென்று சொன்னால் எவரெல்லாம் அமுங்கி இருக்கின்றார்களோ எவரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் உயர்வு வரவேண்டும் என்ற வகையில் இருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழக இயக்கம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனும் தொடவும் முடியாது அசைக்கவும் முடியாது” என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

“சினிமாவில் நடிப்பவர் கூட்டத்தை நடத்தலாம் எந்த வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாது வெல்வோம் 2026 இல் கழகத் தலைவர் தளபதியார் முதலமைச்சர் அமர வைப்போம்” என்றார்.

மேலும் “எம்ஜிஆர், அண்ணாவோட இருந்தவர் கலைஞரோடு இருந்தவர். மக்களோடு மக்களாக இருந்தவர் தான் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு வழங்கியவர். இவர் யார் விஜய் யார் இவர் என்ன செய்திருக்கிறார் என ஒன்றைச் சொல்லுங்கள் 200 கோடி 300 கோடி சம்பாதிக்கக்கூடிய நடிக”ர் என்றார்.

தூத்துக்குடிக்கு வரும் விஜய்க்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு
“மக்கள் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்; மக்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள்” என்றார்

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *