தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 19.07.2025 சனிக்கிழமையன்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 2021-2023 கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை கல்வியியல் பயின்ற ஆசிரிய மாணவியருக்கு 63ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சமூகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. பெ.கீதாஜீவன், சுப்பையா தர்மநிதியின் அறங்காவலர் திரு. செ. கௌதமன் மற்றும் கல்லூரி செயலர் திரு.ச.முரளிதரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜாய்சிலின் சர்மிளா அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், துாத்துக்குடி தொகுதி சட்டமன்றஉறுப்பினருமான திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 77 இளங்கலை கல்வியியல் மாணவியர் 9 முதுகலை கல்வியியல் மாணவியர் மற்றும் மாணவ ஆசிரியர்களுக்குப் பட்டங்களை வழங்கி பட்டமளிப்புவிழா உரை நிகழ்த்தினார். இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லுாரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவியர் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

