தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து
 
					தூத்துக்குடியில் அகில இந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி துவங்கியது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முதல் போட்டியில் கேரளா கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.
 
  
  
 
தூத்துக்குடி மாவட்ட கூடை பந்து கழகம் மற்றும் துறைமுக ஆணைய கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவங்கியது. தொடர்ந்து 15வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டிகள் துவங்கி தொடர்ந்து 5 நாட்கள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சார்ந்த 12 கல்லூரி அணிகள் பங்கு பெற்றுள்ளன. ஆண்களுக்கான முதல் போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் துணை மேலாளர் கௌதம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி அணியை எதிர்த்து ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரி அணி விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரி அணி 78 – 64 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்களுக்கான முதல் போட்டியில் ஜெயின் யுனிவர்சிட்டி பெங்களூரு அணியும் எதிர்த்து கேரளா சேக்ரட் ஹார்ட் கல்லூரி அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கேரளா சேக்ரட் ஹார்ட் கல்லூரி அணி 49 – 36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இபோட்டியில். தூத்துக்குடி மாவட்ட கூடை பந்தாட்ட கழக தலைவர் பிரம்மானந்தம், செயலாளர் சாகுல் சிவாஜிதீன், பொருளாளர் ராஜ்குமார், பாலா மற்றும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
 
  
  
  
  
 
இறுதிப்போட்டி நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெரும் அணிகளுக்கு சுழற்கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.


 
			 
			 
			 
			 
			