பாஜக ஆளும் மாநிலங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்: தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கண்டனம்
கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி எஸ் முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 25ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை நாடு முழுவதும் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாஜக ஆளுகின்ற சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது மதவெறி பிடித்த கும்பல் தாக்குதல் நடத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதுவும் பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் கிறிஸ்மஸ் ஆராதனையில் கலந்து கொண்டு சிறப்பித்த நேரத்தில் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் தாக்குதல் நடத்தி இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.
மதவாத சக்திகளின் இச்செயல் இந்திய இறையாண்மையின் மீது தாக்கப்பட்ட தாக்குதலாகும்.உலக அளவில் இந்தியாவை தலை குனிய செய்திருக்கிறது.
எனவே பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இருக்கின்ற முதல்வர்கள் இரும்பு கரம் கொண்டு இச்செயலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும். பிரதமர் மோடி அவர்களும் நடைபெற்ற இச்செயலுக்கு சிறுபான்மை மக்களிடையே வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்று எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு உத்தரவாதம் தர வேண்டும். இதைத்தான் நாட்டு மக்கள் ஒன்றிய அரசிடம் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு சி.எஸ். முரளிதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

