தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி!

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி!

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளிகளின் மாணவ மாணவியர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் ‘சயின்ஸ் எக்ஸ்போ-25’ என்னும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் தலைமையேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து, அறிவியலின் முக்கியத்துவத்தையும், NMMS போட்டித் தேர்வுகள் மற்றும் இன்ஸ்பையர் அறிவியல் போட்டிகளில் மாணவர்கள் அதிகமாக பங்கேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மையப்படுத்தியும் பேசி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

பள்ளியின் அதிபர் மரிய சிங்கராயர் அடிகளார் முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் வாழ்த்துரை நல்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையுரை நிகழ்த்தினார். இக்கண்காட்சியில், குப்பைத் தொட்டிகள் நிறைந்துவிட்டதை அறிவிக்கும் தானியங்கி அமைப்பு, மின் அனுப்பீட்டுக் கம்பிகளில் பிரச்சனை ஏற்படுகிற போது தானாகவே மின்சாரத்தைத் துண்டிக்கும் அமைப்பு, மீன் தொட்டி கழிவுகளை செடிகளுக்கு உரமாக்கி தூயநீராக்கி மறுசுழற்சி செய்கிற அமைப்பு, பழங்களின் தரப்பரிசோதனை செய்கிற அமைப்பு, பறவைகளுக்கான தானியங்கி நீர் வழங்கி மற்றும் மனிதர்கள் இருப்பதை உணர்ந்து கொள்ளும் தானியங்கி மின்விசிறி அமைப்பு போன்ற படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

திரளான எண்ணிக்கையில் தங்கள் படைப்புகளுடன் கண்காட்சியில் பங்கெடுத்த மாணவர்கள், அறிவியல் படைப்புகளோடு தாங்கள் படிக்கும் எல்லா துறைகளில் இருந்தும் தாங்கள் படித்தவற்றை கொண்டு உருவாக்கிய படைப்புகளையும் காட்சிப்படுத்தினார்கள். கண்காட்சியை பிற பள்ளிகளின் மாணவ மாணவியர் வந்து ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *