தூத்துக்குடி பனிமய மாதாவின் சப்பரபவனி: திரளான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய 443வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பத்தாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற மாதாவின் சப்பரபவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய 443ஆம் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 10ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு மாதாவின் சப்பர பவனி நடைபெற்றது.

இதில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சப்பரத்தில் மாதா எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மாதா சப்பரபவனி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

