திமுக முப்பெரும் விழாவில் கனிமொழி எம்.பிக்கு பெரியார் விருது! – அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்து
 
					திமுக முப்பெரும் விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு பெரியார் விருது! தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன்
 
 
திமுக முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17ஆம் தேதி, கரூரில் நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளான பெரியார் விருது, திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது.
 
 
இந்த நிலையில், இன்று (04/09/2025) தூத்துக்குடி குறிஞ்சி நகரிலுள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், கனிமொழி கருணாநிதி எம்.பி.யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
 
 
மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஈ.ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஶ்ரீகுமார், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


 
			 
			 
			 
			 
			