தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா!
கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் C.S.முரளிதரன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வ உ சி மார்க்கெட் அருகில் அமைந்துள்ள காமராஜரின் சிறு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் C.S.முரளிதரன் அவர்களும் தெற்கு மாவட்ட தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி S. அமிர்தராஜ் MLA அவர்களும் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் T.சேகர், J.ஐசன் சில்வா மாநில பொதுக்குழு உறுப்பினர் S.சந்திரபோஸ், மாநகர் ஊடகப்பிரிவு தலைவர் S.ஜான் சாமுவேல், மாநகர் மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி, மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி, தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், மாவட்ட மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவி கனியம்மாள், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், A.D.பிரபாகரன், K. அருணாசலம், நெப்போலியன், ஜோசப் அரவிந்த், மாவட்ட செயலாளர்கள் S.கோபால், N. நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், கதிர்வேல், குமாரமுருகேசன், சீனிவாசன், தெற்கு மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வெங்கட் சுப்பிரமணியன், மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவி முத்து விஜயா, வார்டு தலைவர்கள் சித்திரை பால்ராஜ், ஜெயமணி சுரேஷ், மகாலிங்கம், கிருஷ்ணன், மகேந்திரன், தனுஷ், அருண்குமார், ரெனிஷ் பாபு ,ஜெபமாலை, ராஜரத்தினம், சுப்ரமணியன், மாநகர் மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியம், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், சாயர்புரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயசீலன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜகுமாரன், வட்டார தலைவர்கள் ஜெயராஜ், கருப்பசாமி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

