தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல்: கனிமொழி MP ஆதங்கம்!

தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல்: கனிமொழி MP ஆதங்கம்!

ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ் ஐ ஆர் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு பல வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “யாருடைய பதவியையும் பறிக்கவில்லை கட்சி தலைவர் என்ற முறையில் அறிவுரை கூறியுள்ளார் வெற்றி பெற வேண்டும் அதற்காக எல்லோரும் முனைப்புடன் பாடுபட வேண்டும்” என  கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “எஸ் ஐ ஆர் ஐ தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாக கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது. இது உண்மையாக நேர்மையாக நடக்க வேண்டும் என்று இருந்தால் போதிய அவகாசம் கொடுத்து எஸ் ஐ ஆர் ஐ அவர்கள் சரியாக செய்ய முடியும். ஆனால் பீகாரில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.”

“எத்தனை பேருடைய வாக்குரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிராவாக இருக்கட்டும்; ஹரியானாவாக இருக்கட்டும்; சமீபத்தில் கூட ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பிலே மக்களுடைய வாக்குரிமை எவ்வாறு பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார் நம்முடைய முதல்வர் அவர்கள் பீகார் சென்று தன்னுடைய முழு ஆதரவையும் அளித்திருக்கிறார்.”

“ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ் ஐ ஆர் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு பல வாக்காளர்களை பல பிரச்சினைகளை வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது இதையெல்லாம் எதிர்த்து தான் திராவிட முன்னேற்றக் கழகமும் நம்முடைய கூட்டணி கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.”

“சமீபத்தில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் கணக்கெடுத்து கொண்டு அதற்கு நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு எல்லாருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

பேட்டியின் போது அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமை ஆசிரியர் கவிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *