கலைஞர் கருணாநிதி ஒரு ‘AI’ – கனிமொழிMP பெருமிதம்
 
					முன்னாள் முதல்வர் கருணாநிதி, ‘AI’ போன்றவர் தூத்துக்குடியில் நடைபெற்ற AI தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெருமைபட கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் மாநகராட்சியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கம் தூத்துக்குடி ஸ்டெம் பார்க்கில் உள்ள கருத்தரங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “AI தொழில்நுட்பம் தற்போதைய காலகட்டத்திற்கு அனைவருக்கும் தேவையான ஒன்று. பல்வேறு தகவல்களை இதன் மூலம் அறிந்து பின்னர் ஒரு முடிவை அவர்கள் முடிவை எடுக்க தொழில்நுட்பம் பயன்படுகிறது.”

“தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ‘AI’ போன்றவர். ஏனென்றால் அவர் பலரிடம் தன்னுடைய கருத்துக்களை கேட்பார். பின்னர் அவர் ஒரு முடிவு எடுப்பார். இதேபோன்று இந்த தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
AI தொழில்நுட்பம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


 
			 
			 
			 
			 
			