88 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்படும் குரூஸ் பர்னாந்தீஸ் பூங்கா!
தூத்துக்குடி: 88 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்படும் குரூஸ் பர்னாந்தீஸ் பூங்கா…. விரைவாக சீரமைக்க வேண்டும் என காங்கிரஸார் கோரிக்கை..

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கட்சி கிழக்கு மண்டல தலைவர் ஐசன்சில்வா கூறுகையில். தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த கோமான் குருஸ் பர்னாந்து நினைவை போற்றும் வகையில் குரூஸ்புரம் பகுதியில், குருஸ் பர்னாந்து நினைவாக கடந்த 1938-ம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த பூங்காவனது ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டு அதில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தளம் மற்றும் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டு உபகரணங்கள் ஓய்வெடுக்கும் வகையில் உட்காரும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது.

நாளடைவில் எந்த பராமரிப்பும் இன்றி பாழடைந்த நிலையில் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் சிதலடைந்து நடைபயிற்சி தளமும் உடைந்து காணப்படுகிறது.

இந்த பழமையான பூங்காவில் மின்விளக்குகள் சேதமடைந்து, மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு இன்றி கிடப்பில் போட்டுள்ளதால், தற்போது இந்த பூங்கா சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக மாறி உள்ளது.
மேலும் குடிநீர் வாழ்வு திறக்கும் தொட்டியும் திறந்து கிடப்பதால், சிறுவர்கள் அதன் உள்ளே விழும் அபாயமும் உள்ளது.
மேலும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் எழுந்துள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.

மாநகரம் முழுவதும் புதிய மற்றும் பழைய பூங்காக்கள் மீது அக்கறைக் காட்டி வரும் மாநகராட்சி நிர்வாகம், மக்களின் தாகம் தீர்த்தவரும், மாநகரத் தந்தை என அனைவராலும் அழைக்கப்படும் குரூஸ் பர்னாந்தீஸ் பெயரில் 88 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூங்காவை சீரமைத்து தரப்படுமா என பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக புதுப்பித்து, பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


