தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபாடு.
தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் முன்னால் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.
தமிழர் திருநாளான தை 1ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பாக வண்ண கோலம் போட்டு அதன்மேல் அடுப்பு வைத்து புதுப்பானையில் பனை ஓலை வைத்து புத்தரிசி போட்டு பொங்கல் வைத்தனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் ஆலயத்திற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தில் வண்ண கோலமிட்டு, கரும்பு, காய்கறி, பழங்கள் படைத்து பாரம்பரியமாக புது பானையில், ஓலை வைத்து பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இதை தொடர்ந்து, பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் இந்த ஆண்டு எந்த விதமான இயற்கை சீற்றங்கள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் விவசாயம் செழிக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலமாக வாழ வேண்டுமென பிரார்த்தனையும் செய்தனர். ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் விளையாட்டு போட்டிகள் பானை உடைத்தல், கும்மியடித்தல், சிலம்பாட்டம் மற்றும் பலூன் உடைத்தல் நடைபெற்றன அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.


