இந்திரா காந்தி நினைவு நாள்: தூத்துக்குடி மகிளா காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்
 
					முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவி பிரீத்தி வினோத் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 
  
  
 
இன்று இந்தியா முழுவதும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தி அவர்களின் திரு முழு உருவசிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவி பிரீத்தி வினோத் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
 
   
    
  
இந்த நிகழ்ச்சியில், மகிளா காங்கிரஸ் துணை தலைவி அன்னதாசி, செயலாளர் சுபா, ஊடகப் பிரிவு அன்னமரியா, செயலர் ஆக்ஸிலியா மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


 
			 
			 
			 
			 
			