வடக்குமாங்குடி ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்!
வடக்குமாங்குடி ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வடக்குமாங்குடி ஊராட்சியில் தஞ்சை மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை, அய்யம்பேட்டை இறைவன் மெடிக்கல் சென்டர், தாருஸ்ஸலாம் மழலையர் துவக்கப்பள்ளி இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமில் கண் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கண்புரை, கண்நீர் அழுத்தநோய், கிட்டபார்வை, தூரபார்வை, கருவிழியில் புண் உள்பட கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

