தை திருநாளை ஒட்டி காஞ்சிபுரத்தில் 100 நாட்களில் ரூ.100 லட்சம் சம்பாதிப்பதற்காக உரிய ஐடியாவை உருவாக்கி பொங்கல் கொண்டாட்டம்

காஞ்சிபுரத்தை சேர்ந்த GBM நிறுவனத்தின் முதல் 100 நாட்களுக்குள் 100 லட்சம் ரூபாய் வணிகத்தை எட்டியுள்ளோம். இந்த புதிய வணிக மன்றத்தின் நிறுவனராக, உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகளால் சாத்தியமான இந்தச் சாதனை குறித்து, “இந்த வெற்றி, மேலும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்குத் தங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை வழங்கிய அனைத்து GBM உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி”யைத் தெரிவிக்கும் விதமாக இன்று பொங்கல் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே ஆட்டோ நகர் பகுதியில் அடுத்த ஓராண்டிற்குள் 10 கோடி ரூபாய் இலக்கை அடைவதே எங்கள் மூலோபாய நோக்கமாகும்.
இது 2026-ல் நாங்கள் முன்னணியில் இருப்பதற்கு வழிவகுக்கும் மகேவில் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் விழா நடைபெற்றது.
இந்தப் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் பொழுது அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பல்வேறு விதமான பட்டிமன்றம் மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
மேலும் வாழ்க்கையில் வளர்வது குறித்து சிறப்பு பட்டிமன்றம் நடத்தி அனைவரும் ஒன்றிணைந்து உணவு அருந்தி கொண்டாடினர்.
விழாவில் சங்க நிறுவனர் டாக்டர் ஜெயகரன், தலைவர் கதிரவன், மற்றும் டைரக்டர்கள் அப்பாஸ் அருண்குமார், கிரண் குமார், மவுலீஸ்வரன், செயலாளர் சிவசங்கர், பொருளாளர் சத்யா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


