காஞ்சிபுரத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியிணை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 38வது சாலை பாதுகாப்பு வாரம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை ஒரு மாத காலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்படும்.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஒலி முகமது பேட்டை வரை விபத்தில் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.

இப்பேரணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். இதில் விபத்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஓட்டுனர் பயிற்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல கலந்து கொண்டனர்.


