காஞ்சிபுரத்தில் கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி
 
					காஞ்சிபுரம் சங்கர் கண் மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கண்பார்வை குறைபாடுகளை பற்றியும், கண்தானத்தின் அவசியத்தை பற்றியும், மருத்துவமனையின் டாக்டர் சங்கரன் அவர்கள் விளக்கமாக கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.சண்முகம், காஞ்சிபுரம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு M. சங்கர் கணேஷ் இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரத்தில் உள்ள லயன்ஸ் சங்க நிர்வாகிகள் I D லயன் மகேஷ் ஆளுநர் பாஸ்கரன், துணை ஆளுநர்கள், லயன்சங்க அங்கத்தினர்கள் கலந்துகொண்டார்கள்.
சென்னை அகர்வால்கண் மருத்துவமனை துணைத்தலைவர் திரு நந்தகுமார், கண்வங்கிகளின் துணை மேலாளர் திரு. ராஜீவ்குமார் , மற்றும் காஞ்சி அன்ன சத்திரம் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

Annai Institute of Allied Health Science மாணவர்கள் கண்தான விழிப்புணர்வு சம்பந்தமாக பதாகைகள் ஏந்தி மனித சங்கிலி மூலமாக விழிப்புணர்வு வழங்கினார்கள்.
இதுபோன்ற நிகழ்வின் மூலமாக கண் தானத்தை பற்றியும் கண்பார்வை பற்றியும் பொதுமக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வாக அமைந்திருக்கும், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


 
			 
			 
			 
			 
			