காஞ்சிபுரம்: திருப்பெரும்புதூர் நகராட்சியில் சுதந்திர தின கொண்டாட்டம்
 
					காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் நகராட்சியில், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் அருள்ராஜ் தலைமையில் சுதந்திர தின கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் SA. அருள்ராஜ் தலைமையில், பல்வேறு இடங்களில் சுதந்திர தினத்தை ஒட்டி கொடியேற்றி விழிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.
திருப்பெருமந்தூர் காந்தி ரோடு சாலையில் அமைந்துள்ள, மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதைப் போல் திருப்பந்தூர் மணிக்கூண்டு அருகில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படம் பொறித்த பேனாக்களை பரிசாக வழங்கி, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட SC துறை மாவட்ட தலைவர் தங்கராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர், படப்பை விவேகானந்தன், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் கீவலூர் K.முருகன் சாந்தகுமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், செல்வராஜ், வல்லக்கோட்டை புண்ணியநாதன் பீமன் தாங்கள் கர்ணன், அமாவாசை, மற்றும் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்களும் கலந்து கொண்டனர்.


 
			 
			 
			 
			 
			