திருவள்ளூர் அருகே மூடிக்கிடக்கும் சுத்திகரிப்பு நிலையம்: குடிநீருக்காக மக்கள் அவதி
 
					திருவள்ளூர் அருகே 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் குடிநீருக்காக மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் திருவேங்கடாபுரம் 2023 , 2024 என் டி சி எல் என் டி பி சி நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டிடம் அமைக்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகிறது.
இந்த கட்டிடத்தை இதுவரையிலும் திறக்கப்படாமலேயே பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் உள்ளே சுத்திகரிப்பு இயந்திரங்கள் அனைத்தும் பழுதாகி கிடைக்கின்றன.
 
 
10 லட்சம் ரூபாய் வீணாகி கிடக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இதனால், திருவெங்கடாபுரம் பகுதி மக்கள் குடிநீருக்காக அவதியடைந்து வரும் நிலையில் தவித்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


 
			 
			 
			 
			 
			