முத்தையாபுரத்தில் கட்டப்பட்ட மது மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் திறப்பு விழா
தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து, வ.உ.சி துறைமுக ஆணையத்தின் சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.238 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கட்டப்பட்ட மது மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் திறப்பு விழா இன்று (07/11/2025) நடைபெற்றது. இந்த மையத்தை, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



