தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி புதிய சாலை பணகளை துவக்கி வைத்த கனிமொழி கருணாநிதி MP

தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி புதிய சாலை பணகளை துவக்கி வைத்த கனிமொழி கருணாநிதி MP

தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி புதிய சாலை பணகளை துவக்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2025-26 தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி வரை செல்லக்கூடிய புதிய சாலை திட்டத்தில் பகுதி-1 புதியம்புத்தூர் முதல் வாஞ்சி மணியாச்சி வரையிலான 15.4கி.மீ சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (30/01/2026) நடைபெற்றது.

விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *