தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் ஆடம்பர கூட்டு திருப்பலி
 
					தூத்துக்குடி: அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43ஆம் ஆண்டு திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி வெகு விமர்சையாக நடைபெற்றது.



தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 43ம் ஆண்டு திருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் மாலை ஜெபமாலையும் பிரார்த்தனையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அன்னையின் திருவுருவ சப்பர பவனியும், அசன விருந்தும் நடைபெற்றது.

இறுதி நாளான இன்று 43ஆம் ஆண்டு திருவிழா கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்பணி. பிராங்க்ளின் பர்ணாந்த் அவர்கள் தலைமையில், புனித அருஸ்தினார் சபை குமுளி தியாக இல்லம் அருட்பணி. சந்தியா விசுவாசம் அவர்கள், லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி. செல்வன் பெர்னான்டோ அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆடம்பர திருவிழா சிறப்பு திருப்பலியை சிறப்பித்தனர்.
இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அதனைத் தொடர்ந்து கேக் வெட்டி வேளாங்கண்ணி மாதா பிறந்த நாளை கொண்டாடினார்கள். விழா ஏற்பாட்டினை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் செய்திருந்தனர்.



 
			 
			 
			 
			 
			