மின்வாரியம் மீது அடுக்கடுக்கான புகார்களை வைக்கும் காட்டூர் மக்கள்!
காட்டூர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இறால் பண்ணைக்கு மின்சாரம் வழங்குவதாக குற்றம் சாட்டி வரும கிராம மக்கள், தங்களது கிராமத்திற்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரவு நேரங்களில் போதிய மின்சாரம் வழங்கப்படாமலும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். காட்டூர் பகுதியில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் இறால் பண்ணைகளை வைத்து வருகின்றனர்.

இறால் பண்ணைக்கு மின்னழுத்த உயர் மூலம் காட்டூர் பகுதியில் மின்சாரம் செல்வதால் ஆங்காங்கே மின்சார மின்னழுத்த உயர்தல் தீப்பொறி விழுவதினால் குடிசை வீடுகளில் மேல் விழுந்து தீப்பற்றி ஏறியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒரு வீடு தீ பற்றி எரிந்து வீட்டில் இருந்த உபயோகப் பொருட்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன. இதனால் இந்தப் பகுதியில் உயர்மின் அழுத்த மின்சார வயர்களை வேறொரு இடத்திற்கு மாற்ற கோரி பலமுறை மனு அளிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மின்சாரத்துறை பொறியாளர் நந்தகுமாரிடம் மனு அளித்தால் பொதுமக்களிடம் மழுப்பலாக பதில் சொல்வதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த மாதம் நடைபெற்ற MP குறைதீர்க்கும் முகாமில் நேரடியாக மனு அளித்தனர். திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் நேரடியாக போன் மூலம் அழைத்து இதுகுறித்து விரிவான தீர்வு காண வேண்டும் என மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
காட்டூர் பகுதியில் மின்சாரம் மின்னழுத்த செல்வதால் தீப்பொறிக்கு இறையாகி தனது கணவர் மூன்று வருடத்திற்கு முன்பு மாரடைப்பால் இருந்து விட்டார் எனவும், இதை உடனடியாக மாற்றக்கோரி பலமுறை மனு அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஒரு ஒரு பெண்மணி தனது தாலியே பறிபோனது எனவும், மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகள் அந்த மின் இணைப்பு துண்டிக்கப்படும் மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும், தங்களது கிராமத்திற்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

